வடகிழக்கு பருவமழை பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை கூட்டம்


வடகிழக்கு பருவமழை பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை கூட்டம்
x

ராணிப்பேட்டையில் வடகிழக்கு பருவமழை பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது குறித்து ஆலோசனை கூட்டம் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் சம்பத் தலைமையில் நடந்தது.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டையில் வடகிழக்கு பருவமழை பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது குறித்து ஆலோசனை கூட்டம் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் சம்பத் தலைமையில் நடந்தது.

ஆலோசனை கூட்டம்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது குறித்து ஆலோசனைக் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. மாவட்ட கண்காணிப்பு அலுவலர் வி.சம்பத் தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் மாவட்டத்தில் எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை தடுப்பு பணிகள், பாதுகாப்பு நடவடிக்கைகளை குறித்தும், மாவட்டத்தின் பெய்துள்ள மழை அளவு, கடந்த கால வெள்ள பாதிப்புகள் குறித்தும் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் கேட்டறிந்தார்.

மேலும் முதல் தகவல் அளிப்பவர்கள் அவருடைய பணிகள் குறித்தும், மாவட்ட அளவில், வட்ட அளவில், பிர்கா அளவில் கட்டுப்பாட்டு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளதையும், அதில் நியமிக்கப்பட்டவர்களின் பணிகளையும், தென்மேற்கு பருவமழை காலத்தில் ஏற்பட்ட பாதிப்புகளையும் கேட்டறிந்தார்.

பேரிடர் மீட்பு குழுவினர்

அனைத்து அலுவலர்களும் பருவமழை காலங்களில் பொதுமக்கள் பாதிப்படையாத வண்ணம் மீட்பு பணிகளை உடனுக்குடன் மேற்கொள்ள வேண்டும், ஆறு மற்றும் கால்வாய் ஏரிகளில் நீர் நிரம்பியுள்ளதால், அதில் எதிர்பாராத விதமாக சென்று மாட்டிக்கொள்ளும் மக்களை பாதுகாக்கவும், மேலும் அவர்கள் முன்னெச்சரிக்கின்றி நீர் நிலைகளில் செல்ல கூடாத வகையில் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் இப்பணிகளுடன் சேர்த்து மேற்கொள்ள வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

முன்னதாக கனமழை எச்சரிக்கைக்காக வருகை புரிந்த தேசிய பேரிடர் மீட்பு குழுவினரிடம் மாவட்ட கண்காணிப்பாளர் கலந்துரையாடினார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் குமரேஷ்வரன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சுரேஷ், அலுவலக மேலாளர் பாபு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story