கண்காணிப்பு கேமராக்களின் செயல்பாடுகள் குறித்த கலந்தாய்வு கூட்டம்


கண்காணிப்பு கேமராக்களின் செயல்பாடுகள் குறித்த கலந்தாய்வு கூட்டம்
x
தினத்தந்தி 13 May 2023 12:15 AM IST (Updated: 13 May 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

போலீஸ் நிலையங்களில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களின் செயல்பாடுகள் குறித்து கலந்தாய்வு கூட்டம் நாகர்கோவிலில் நடந்தது. இதில் கலெக்டர் ஸ்ரீதர், மேற்பார்வைக்குழுவினருடன் ஆலோசனை நடத்தினார்.

கன்னியாகுமரி

நாகர்கோவில்,

போலீஸ் நிலையங்களில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களின் செயல்பாடுகள் குறித்து கலந்தாய்வு கூட்டம் நாகர்கோவிலில் நடந்தது. இதில் கலெக்டர் ஸ்ரீதர், மேற்பார்வைக்குழுவினருடன் ஆலோசனை நடத்தினார்.

கலந்தாய்வு கூட்டம்

குமரி மாவட்டத்தில் உள்ள 4 மகளிர் போலீஸ் நிலையங்கள் உள்பட மொத்தம் 33 போலீஸ் நிலையங்களின் நுழைவு வாயிலில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த கேமராக்கள் 360 டிகிரியில் சுழலும் திறனுடன் செயல்படுகிறது. இதன்மூலம் போலீஸ் நிலைய வளாகத்திலும், அங்கு நடக்கும் நடவடிக்கை, புகார் அளிக்க வருபவர்களின் விவரங்கள் அனைத்தும் நேரடியாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் இருந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் போலீஸ் நிலையங்களில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களின் செயல்பாடுகள் குறித்து கலந்தாய்வு கூட்டம் நேற்று நாகர்கோவிலில் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கலெக்டர் ஸ்ரீதர் தலைமை தாங்கினார். போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் முன்னிலை வகித்தார்.

மேற்பார்வைக்குழு அமைப்பு

கூட்டத்தில் கலெக்டர் ஸ்ரீதா் பேசுகையில், குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் செயல்பாட்டில் இருப்பதை உறுதி செய்ய பத்மநாபபுரம் சப்-கலெக்டர் கவுசிக், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத், மாநகராட்சி ஆணையர் ஆனந்த் மோகன் மற்றும் கோட்டாட்சியர் சேதுராமலிங்கம், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் மெர்லியன்ட் தாஸ் மற்றும் நகராட்சி ஆணையாளர்கள், பேரூராட்சி உதவி இயக்குனர், தேசிய தகவல் மைய மேலாளர் கொண்ட மாவட்ட அளவிலான மேற்பார்வை குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது என்றார்.

முன்னதாக பத்மநாபபுரம் கோட்டத்திற்குட்பட்ட தக்கலை, குளச்சல், மணவாளக்குறிச்சி, இரணியல், கருங்கல் ஆகிய போலீஸ் நிலையங்களில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவின் செயல்பாடுகள் குறித்து பத்மநாபபுரம் சப்-கலெக்டர் கவுசிக் நேரில் சென்று ஆய்வு செய்தார். இதேபோல நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட கோட்டார், வடசேரி, ஆசாரிப்பள்ளம், நேசமணி நகர் ஆகிய போலீஸ் நிலையங்களில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவின் செயல்பாடுகள் குறித்து நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.

அதிகாரிகள்

கூட்டத்தில், மாநகராட்சி ஆணையர் ஆனந்த் மோகன், பத்மநாபபுரம் சப்-கலெக்டர் கவுசிக், கோட்டாட்சியர் சேதுராமலிங்கம், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சுப்பையா, உதவி இயக்குனர் (பேரூராட்சிகள்) விஜயலெட்சுமி, நாகர்கோவில் துணை போலீஸ் சூப்பிரண்டு நவீன்குமார் மற்றும் குளச்சல், பத்மநாபபுரம், குழித்துறை, நகராட்சி ஆணையர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story