ஆக்கிரமிப்பு அகற்றம் குறித்து ஆலோசனை கூட்டம்


ஆக்கிரமிப்பு அகற்றம் குறித்து ஆலோசனை கூட்டம்
x

ஆக்கிரமிப்பு அகற்றம் குறித்து ஆலோசனை கூட்டம்

ராமநாதபுரம்

கீழக்கரை

கீழக்கரை வள்ளல் சீதக்காதி சாலையில் ஆக்கிரமிப்பு அகற்றப்படுவது தொடர்பாக ஆலோசனை கூட்டம் கீழக்கரை தாலுகா அலுவலகத்தில் நடைபெற்றது. தாசில்தார் சரவணன் தலைமை தாங்கினார். வள்ளல் சீதக்காதி சாலையான கீழக்கரை முக்கு ரோட்டில் இருந்து கடற்கரை சாலை வரையில் இருபுறமும் ஆக்கிரமிப்பு அகற்ற முடிவு செய்யப்பட்டது. மேலும் கீழக்கரை நகருக்குள் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் ஆம்னி பஸ்கள் நகருக்குள் வருவதை தடைசெய்யப்பட்டுள்ளது. மீறும் பட்சத்தில் ஆம்னி பஸ்கள் பறிமுதல் செய்யப்படும் என்றும், கனரக வாகனங்கள் மற்றும் சரக்கு வாகனங்கள் காலை 11 மணி முதல் 3 மணி வரை குறிப்பிட்ட நேரத்திற்குள் மட்டும் நகருக்குள் அனுமதிக்கப்படும் என்றும், இருசக்கர வாகனங்களை சீதக்காதி சாலையில் ஒரு பகுதியில் மட்டும் நிறுத்துவதற்கு அனுமதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. துணை தாசில்தார் பழனி குமார், நகராட்சி ஆணையாளர் செல்வராஜ், இன்ஸ்பெக்டர் பாலமுரளி மற்றும் வர்த்தக சங்க தலைவர், உறுப்பினர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story