விநாயகர் சதுர்த்தி விழா பாதுகாப்பு குறித்த ஆலோசனை கூட்டம்
விநாயகர் சதுர்த்தி விழா பாதுகாப்பு குறித்த ஆலோசனை கூட்டம் போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் நடந்தது.
வாணியம்பாடியில் விநாயகர் சதுர்த்தி விழா பாதுகாப்பு குறித்த ஆலோசனை கூட்டம் திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் தலைமையில் நேற்று நடைபெற்றது. வாணியம்பாடி துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ் பாண்டியன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் இன்ஸ்பெக்டர்கள் பழனி, நாகராஜ், அருண்குமார், செல்லபாண்டியன், ஜெயலட்சுமி, தமிழரசி, சாந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விநாயகர் சதுர்த்தி விழாவினை எந்த ஒரு அசம்பாவித சம்பவங்களும், சட்டம், ஒழுங்கு பிரச்சினைகளும் ஏற்படாமல் சிறப்பான பாதுகாப்பு பணியை மேற்கொள்ளும்படி போலீசாருக்கு, மாவட்ட போலீஸ்சூப்பிரண்டு அறிவுரை வழங்கினார்.
இதில் வாணியம்பாடி போலீஸ் சரக்கத்திற்குட்பட்ட வாணியம்பாடி, ஆலங்காயம், நாட்டறம்பள்ளி, திம்மாம்பேட்டை மற்றும் அம்பலூர் போலீஸ் நிலையங்களில் பணிபுரியும் 100-க்கும் மேற்பட்ட போலீசார் கலந்துகொண்டனர்.