முருங்கை பூங்கா அமைப்பது குறித்த ஆலோசனை கூட்டம்


முருங்கை பூங்கா அமைப்பது குறித்த ஆலோசனை கூட்டம்
x

முருங்கை பூங்கா அமைப்பது குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

கரூர்

கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று முருங்கை ஏற்றுமதி மண்டலம் மற்றும் முருங்கை பூங்கா அமைப்பது குறித்து மாவட்ட பங்குதாரர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதற்கு தமிழ்நாடு அரசு தொழில் ஆணையர் மற்றும் தொழில் வணிகத்துறை இயக்குனர் சிஜி தாமஸ் வைத்யன் தலைமை தாங்கினார். கலெக்டர் பிரபுசங்கர் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் கரூர் மாவட்டத்தில் முருங்கை சாகுபடி அதிகம் இருப்பதால் கரூர் மாவட்டத்திற்கு முருங்கை பூங்கா அமைத்தால் எங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். நாங்கள் ஏற்கனவே பல்வேறு தொழில் நிறுவனங்கள் நடத்தியும், பல்வேறு டெக்ஸ்டைல் தொழில் மூலம் உற்பத்தி செய்யும் பொருட்களை வெளிமாநிலம் மற்றும் வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்து விற்பனை செய்து வருகின்றோம். இந்நிலையில் இந்த முருங்கை சாகுபடியினை ஏற்றுமதி செய்வதும் பயனுள்ளதாக இருக்கும். எனவே நாங்கள் அனைவரும் முருங்கை பூங்கா அமைக்கும் பணிக்கு முன்னெடுத்து வருகின்றோம்.

இதற்கு ஏற்றாற்போல் கரூர் மாவட்டத்திற்கு முருங்கை பூங்கா அமைத்து தருவதற்கு முதல்-அமைச்சரிடம் பரிந்துரைக்கும்படி கூட்டத்தில் பல்வேறு தொழில் முனைவோர்கள் கருத்துகளை தெரிவித்தனர். முன்னதாக மாவட்ட தொழில் மையத்தின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள கண்காட்சி அரங்கினை தொழில் வணிகத்துறை இயக்குனர் பார்வையிட்டார்.


Next Story