விதைப்பண்ணை அமைப்பது குறித்த ஆலோசனை கூட்டம்


விதைப்பண்ணை அமைப்பது குறித்த ஆலோசனை கூட்டம்
x
தினத்தந்தி 17 March 2023 12:15 AM IST (Updated: 17 March 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

லக்கிநாயக்கன் பட்டியில் விதைப்பண்ணை அமைப்பது குறித்த ஆலோசனை கூட்டம்

கள்ளக்குறிச்சி

மூங்கில்துறைப்பட்டு

மூங்கில்துறைப்பட்டு அருகே உள்ள லக்கிநாயக்கன்பட்டியில் அட்மா திட்டத்தில் விதைப்பண்ணை அமைப்பது குறித்து விவசாயிகளுக்கு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதற்கு திருவண்ணாமலை மாவட்டம் வாழவச்சனூர் அரசு வேளாண்மை மற்றும் ஆராய்ச்சி கல்லூரி முதல்வர் முத்துகிருஷ்ணன் தலைமை தாங்கி மக்காச்சோளத்தில் படைப்புழு தாக்குதல், மரவள்ளியில் மாவு பூச்சி தாக்குதல், விவசாய பயிர் மேலாண்மை, விவசாயிகள் விதைகளை எவ்வாறு தேர்ந்தெடுக்க வேண்டும் என பல்வேறு ஆலோசனைகளை வழங்கிய அவர் விவசாயிகளின் கேள்விக்கு பதில் அளித்தார். தொடர்ந்து பயிர்களை தாக்கும் பூச்சிகளை கட்டுப்படுத்தும் முறைகள் குறித்து வேளாண் அறிவியல் நிலைய இணை பேராசிரியர் ஷர்மிளாபாரதி, வேளாண்மை உதவி இயக்குனர்(தர கட்டுப்பாடு) அன்பழகன் ஆகியோர் ஆலோசனை வழங்கினர்.

கூட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர் ஷீலா ராஜேந்திரன், வேளாண்மை உதவி இயக்குனர் புஷ்பராணி, வேளாண்மை அலுவலர் ஆனந்தன், வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை ராஜ்குமார், துணை வேளாண் அலுவலர் காசி, உதவி வேளாண்மை அலுவலர்கள் வெங்கடேசன், பழனிவேல், ஆரோக்கியசாமி மணிகண்டன், அட்மா வட்டார தொழில்நுட்ப மேலாளர் மவிசுதா, உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் அருண்குமார், லோகபிரியா மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர். இறுதியில் மானிய விலையில் விவசாயிகளுக்கு உளுந்து வழங்கப்பட்டது.


Next Story