மயானகொள்ளை திருவிழா குறித்து ஆலோசனை கூட்டம்


மயானகொள்ளை திருவிழா குறித்து ஆலோசனை கூட்டம்
x

கண்ணமங்கலத்தில் மயானகொள்ளை திருவிழா குறித்து ஆலோசனை கூட்டம் நடந்தது.

திருவண்ணாமலை

கண்ணமங்கலம்

கண்ணமங்கலம் போலீஸ் நிலையத்தில் மயான கொள்ளை திருவிழா குறித்து ஆலோசனை கூட்டம் இன்று நடந்தது. மயான கொள்ளை விழா குழுவினருக்கு கண்ணமங்கலம் இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி, பயிற்சி சப்-இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி ஆகியோர் ஆலோசனைகள் வழங்கினர்.

அப்போது அலகு குத்தி பறந்து வந்து அம்மனுக்கு மாலை அணிவிக்கும் நிகழ்வுக்கு அனுமதி இல்லை, போக்குவரத்து பாதிப்பு இல்லாமல் விழாவை குறிப்பிட்ட நேரத்துக்குள் முடிக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு ஆலோசனைகள் வழங்கினர்.

இதில் கண்ணமங்கலம், காட்டுக்காநல்லூர் பகுதியில் மயானக் கொள்ளை நடத்தும் விழாக்குழுவினர், வண்ணாங்குளம் கிராம நிர்வாக அலுவலர் துரைராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த நிலையில் கண்ணமங்கலம் அங்காளம்மன் கோவிலில் இன்று கரக ஊர்வலமும், இரவில் ஜோதி கரக ஊர்வலமும் நடந்தது.

நாளை காலை அங்காளம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் செய்து தீபாராதனை நடக்கிறது.

பிற்பகல் 4 மணி அளவில் உற்சவர் அங்காளம்மன் அலங்கரிக்கப்பட்ட பூத வாகனத்தில் ஊர்வலமாக சென்று கண்ணமங்கலம் நாகநதி சந்தைமேட்டில் மயான கொள்ளை உற்சவம் நடக்கிறது.


Next Story