மகளிர் உரிமைத்தொகை குறித்த ஆலோசனை கூட்டம்


மகளிர் உரிமைத்தொகை குறித்த ஆலோசனை கூட்டம்
x
தினத்தந்தி 18 July 2023 12:15 AM IST (Updated: 18 July 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

சீர்காழியில் மகளிர் உரிமைத்தொகை குறித்த ஆலோசனை கூட்டம் உதவி கலெக்டர் தலைமையில் நடந்தது

மயிலாடுதுறை

சீர்காழி:

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கலைஞரின் மகளிர் உரிமைத்தொகை வழங்கும் திட்டம் குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு உதவி கலெக்டர் அர்ச்சனா தலைமை தாங்கினார். சீர்காழி தாசில்தார் செந்தில்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சரவணன், இளங்கோவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊரக வளர்ச்சி துறை உதவி செயற்பொறியாளர் சீதாலட்சுமி வரவேற்று பேசினார். கலைஞரின் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் பயனாளிகளை எவ்வாறு தேர்வு செய்ய வேண்டும் என்பது குறித்தும், வருகிற 24-ந்தேதி முதல் பயனாளிகளுக்கு மனுக்கள் வழங்கப்பட்டு மறுநாள் 25-ந் தேதி முதல் அந்தந்த ஊராட்சிகளில் தினமும் சுமார் 60 பயனாளிகளிடம் விண்ணப்பங்களை பெற வேண்டும். விண்ணப்பம் வழங்க வருகை தரும் பயனாளிகளுக்கு தேவையான குடிநீர், சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஊராட்சி மன்ற தலைவர்கள் செய்து தர வேண்டும் என உதவி கலெக்டர் அர்ச்சனா கேட்டுக்கொண்டார். முன்னதாக அனைத்து ஊராட்சி மன்ற தலைவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்குவது தொடர்பான அரசாணை எண் 15 புத்தகங்களை உதவி கலெக்டர் வழங்கினார். கூட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர்கள், துணைத்தலைவர்கள், ஊராட்சி செயலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Next Story