சிவன்கோவில் கும்பாபிஷேகம் தொடர்பான ஆலோசனை கூட்டம்
சிவன்கோவில் கும்பாபிஷேகம் தொடர்பான ஆலோசனை கூட்டம் இன்று நடக்கிறது.
விருதுநகர்
சிவகாசி,
சிவகாசி சிவன் கோவிலில் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்னர் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்தநிலையில் இந்த ஆண்டு கும்பாபிஷேகம் செய்ய கோவில் நிர்வாகம் ஏற்பாடு செய்து வந்தது. இந்தநிலையில் கும்பாபிஷேகம் தொடர்பான ஆலோசனை கூட்டம் இன்று (புதன்கிழமை) மாலை 5 மணிக்கு கோவில் வளாகத்தில் நடைபெற உள்ளது. இதில் ஆன்மிக பெரியவர்கள், நகர முக்கிய பிரமுகர்கள், சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டு ஆலோசனை வழங்க உள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை கவனித்து வரும் கோவில் செயல் அலுவலர் சத்தியசீலன் பொதுமக்கள் அதிக அளவில் கலந்து கொண்டு ஆலோசனை வழங்க வலியுறுத்தி உள்ளார்.
Related Tags :
Next Story