நாங்கூர் கருட சேவை உற்சவம் தொடர்பான ஆலோசனை கூட்டம்


நாங்கூர் கருட சேவை உற்சவம் தொடர்பான ஆலோசனை கூட்டம்
x
தினத்தந்தி 20 Jan 2023 12:15 AM IST (Updated: 20 Jan 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

நாங்கூர் கருட சேவை உற்சவம் தொடர்பான ஆலோசனை கூட்டம் உதவி கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது

மயிலாடுதுறை

சீர்காழி:

சீர்காழி அருகே நாங்கூரில் 108 வைணவ திவ்ய தேசங்களில் 11 திவ்யதேச கோவில்கள் ஒரே பகுதியில் அமைந்துள்ளது. ஆண்டு தோறும் தை மாதத்தில் கருடசேவை உற்சவம் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு தங்க கருடசேவை உற்சவம் வருகிற 22-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) இரவு நடைபெறுகிறது. இந்த நிலையில் சீர்காழி உதவி கலெக்டர் அலுவலகத்தில் உதவி கலெக்டர் நேர்முக உதவியாளர் சுந்தரம் தலைமையில் கருட சேவை தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட கவுன்சிலர் ஆனந்தன் பேசுகையில், விழா நடக்க ஓரிரு நாள் மட்டுமே இருப்பதால் எந்த முன்னேற்பாடுகளும் சரிவர நடைபெறவில்லை என குற்றம் சாட்டினார். இந்த விழாவில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொள்ள இருப்பதால் தேவையான அடிப்படை வசதிகளான குடிநீர், மருத்துவம், கழிவறை உள்ளிட்ட அனைத்து பணிகளும் சிறப்பாக நடைபெற நடவடிக்கை எடுக்கப்படும் என உதவி கலெக்டரின் நேர்முக உதவியாளர் சுந்தரம் தெரிவித்தார். கூட்டத்தில் சீர்காழி தாசில்தார் செந்தில்குமார், சீர்காழி வட்டார வளர்ச்சி அலுவலர் சரவணன், செயல் அலுவலர் அன்பரசன், திருவெண்காடு வட்டார மருத்துவ அலுவலர் ராஜ்மோகன், பூம்புகார் தீயணைப்பு நிலைய அலுவலர் ரமேஷ், நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் சசிகலாதேவி, திருவெண்காடு போலீஸ் இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை, கருட சேவை கமிட்டி செயலாளர் உள்பட விழாக்குழு மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.


Next Story