அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்களுடன் கலந்தாய்வு கூட்டம்


அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்களுடன் கலந்தாய்வு கூட்டம்
x

ஆதார் எண் விவரங்களை வாக்காளர் அட்டையுடன் இணைப்பது குறித்து அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்களுடன் கலந்தாய்வு கூட்டம் கலெக்டர் முருகேஷ் தலைமையில் நடந்தது.

திருவண்ணாமலை

ஆதார் எண் விவரங்களை வாக்காளர் அட்டையுடன் இணைப்பது குறித்து அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்களுடன் கலந்தாய்வு கூட்டம் கலெக்டர் முருகேஷ் தலைமையில் நடந்தது.

கலந்தாய்வு கூட்டம்

வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளவர்களின் ஆதார் எண் விவரங்களை வாக்காளர் அட்டையுடன் இணைப்பது குறித்து அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்களுடன் கலந்தாய்வு கூட்டம் இன்று திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.

கலெக்டர் முருகேஷ் தலைமை தாங்கி பேசியதாவது:-

இந்திய தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளவர்களின் ஆதார் எண் விவரங்களை வாக்காளர் அட்டையுடன் இணைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது.

இதன் மூலம் வாக்காளர்களின் பெயர்கள் இரட்டைப் பதிவு, பல இடங்களில் பதிவு போன்றவற்றை தவிர்க்க முடியும். 31.3.2023-க்கு முன்பாக வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள அனைத்து வாக்காளர்களின் ஆதார் எண்கள் பெறப்பட்டு வாக்காளர் அட்டையுடன் இணைக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

ரகசியமாக பாதுகாக்கப்படும்

இதற்கான பணி வருகிற 31.3.2023 வரை நடைபெற உள்ளது. வாக்காளர்களின் ஆதார் எண் விவரங்களை 6பி என்ற படிவத்தில் அளிக்க வேண்டும். இ-சேவை மையங்கள் மூலமாக அல்லது சம்பந்தப்பட்ட தாசில்தார், உதவி வாக்காளர் பதிவு அதிகாரி அல்லது வருவாய் கோட்ட அலுவலர், வாக்காளர் பதிவு அதிகாரிகளிடம் ஆதார் எண் விவரங்களை அளிக்கலாம்.

வாக்காளர்களின் ஆதார் எண் விவரங்கள் ரகசியமாக பாதுகாக்கப்படும். அரசு துறை மூலமாக இந்த பணி தொடர்பாக பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட உள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த ஜூன் மாதம் 30-ந் தேதி வரை உள்ள 28 லட்சத்து 70 ஆயிரத்து 513 மக்கள் தொகையில் 5 வயதிற்குட்பட்டவர்கள் 84 ஆயிரத்து 772 பேரும், 5 வயதிலிருந்து 18 வயது உடையவர்கள் 4 லட்சத்து 87 ஆயிரத்து 887 பேரும், 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் 20 லட்சத்து 19 ஆயிரத்து 729 பேரும் ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்டு உள்ளனர்.

மாவட்டத்தில் மொத்தம் 21 லட்சத்து 1,530 வாக்காளர்கள் உள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) குமரன் மற்றும் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் கலந்து கொண்டனர்.


Next Story