சிறிய அளவிலான ஜவுளி பூங்கா அமைப்பது தொடர்பாக தொழில் முனைவோர்களுடன் கலந்தாய்வு கூட்டம்


சிறிய அளவிலான ஜவுளி பூங்கா அமைப்பது தொடர்பாக தொழில் முனைவோர்களுடன் கலந்தாய்வு கூட்டம்
x

சிறிய அளவிலான ஜவுளி பூங்கா அமைப்பது தொடர்பாக தொழில் முனைவோர்களுடன் கலந்தாய்வு கூட்டம் கரூரில் நேற்று நடைபெற்றது.

கரூர்

கலந்தாய்வு கூட்டம்

தமிழ்நாட்டில் உள்ள ஜவுளி மையங்களில் சிறிய அளவிலான ஜவுளி பூங்காக்கள் அமைப்பதை ஊக்குவிக்கும் வகையிலும், உட்கட்டமைப்பு வசதி ஏற்படுத்துவதற்கும், ஒருங்கிணைந்த ஜவுளி பூங்கா அமைக்க முன்வரும் தொழில் முனைவோருக்கு ரூ.2½ கோடி வரை நிதியுதவி தமிழக அரசால் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு அரசாணை பெறப்பட்டது.

ஜவுளி பூங்காக்களின் உட்கட்டமைப்பிற்கான செலவின தொகையில் 50 சதவீதம் அல்லது ரூ.2½ கோடி இதில் எது குறைவோ அதனை நிபந்தனைக்குட்பட்டு வழங்க ஆணையிடப்பட்டுள்ளது தொடர்பாக தொழில் முனைவோர்களுடன் கலந்தாய்வு கூட்டம் கலெக்டர் தலைமையில் நேற்று நடைபெற்றது.

ஜவுளித்துறையினர் ஆர்வம்

இக்கூட்டத்தில் கலெக்டர் பிரபுசங்கர் கூறுகையில், கரூர் மாவட்டம் ஜவுளி துறையில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மாவட்டங்களில் 100 சிறு ஜவுளி பூங்காக்கள் அமைத்திட தொழில் முனைவோர் ஒத்துழைப்போடு அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சிறு ஜவுளி பூங்கா அமைப்பதற்கு பிற மாவட்டங்களை காட்டிலும் கரூர் மாவட்டத்தில் ஜவுளித்துறையினர் ஆர்வம் காட்டி வருவது மகிழ்ச்சிக்குரியதாகும்.

கரூர் மாவட்டத்தில் பாலம் திட்டத்தின் கீழ் கிராமப்புற பெண்களுக்கு வேலைவாய்ப்பு அளித்து வருகிறோம். ஆகையால் கிராமத்தில் உள்ள பெண்களில் வாழ்வதாரம் முன்னேற்றத்திற்கு சிறிய அளவிலான ஜவுளி பூங்கா அமைத்திட முன் வரவேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story