அனைத்துத்துறை அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டம்


அனைத்துத்துறை அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டம்
x

கள்ளக்குறிச்சியில் 75-வது சுதந்திரதின விழா முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்துதுறை அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டம் கலெக்டர் ஷ்ரவன்குமார் தலைமையில் நடைபெற்றது

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி

ஆலோசனை கூட்டம்

கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் 75-வது சுதந்திர தின அமுதப்பெருவிழாவை சிறப்பாக கொண்டாடுவது குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆலோசனைக்கூட்டம் கலெக்டர் ஷ்ரவன் குமார் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பகலவன் முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:-

வீடுகளில் தேசியக்கொடி

தமிழக அரசின் அறிவுறுத்தலின்படி 75-வது சுதந்திர தின அமுதப் பெருவிழாவை சிறப்பான கொண்டாடும் வகையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வருகிற 11-ந் தேதி முதல் 17-ந் தேதி வரை சுதந்திர தின வாரமாக கடைபிடித்து பல்வேறு சுதந்திர தின விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மேற்கொள்ளவும், சுதந்திர போராட்டங்கள் குறித்த விழிப்புணர்வுகளை பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு ஏற்படுத்த வேண்டும்.

பல்வேறு போட்டிகள் நடத்தி சுதந்திர தின விழாவில் பரிசுகள் வழங்க வேண்டும். 75-வது சுதந்திர தினத்தை சிறப்பாக கொண்டாடுவதற்கு ஒரு வாரம்(11-ந் தேதி முதல் 17-ந் தேதி வரை) அனைத்து வீடுகளிலும் தேசியக்கொடியை ஏற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். மேலும் 15-ந் தேதி கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் சுதந்திரதின விழா சிறப்பாக நடைபெறவுள்ளது.

அடிப்படை வசதிகள்

விழாவில் சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு மரியாதை செலுத்துதல், மைதானம் சீரமைக்கும் பணி, கொரோனா தொற்றால் பாதிப்பு ஏற்படா வண்ணம் அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். போலீஸ் பாதுகாப்பு, குடிநீர், தற்காலிக கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள், மருத்துவ முகாம் அமைத்தல் ஆகிய பணிகளை மேற்கொள்ள வேண்டும். அந்தந்த துறைகளுக்கென ஒதுக்கீடு செய்யப்பட்ட பணிகளை சிறப்புடன் செய்து 75-வது சுதந்திர தின விழாவை வெகுசிறப்பாக கொண்டாட தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் விஜய்பாபு, கலெக்டரின் நேர்முக உதவியாளர்(பொது) சுரேஷ், வேளாண் இணை இயக்குனர் வேல்விழி, முதன்மை கல்வி அலுவலர் விஜயலட்சுமி, கோட்டாட்சியர்கள் பவித்ரா, யோகஜோதி மற்றும் காவல்துறை உள்ளிட்ட அனைத்துத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


Next Story