அனைத்துத்துறை அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டம்


அனைத்துத்துறை அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டம்
x

அனக்காவூரில் அனைத்துத்துறை அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டம் நடந்தது.

திருவண்ணாமலை

செய்யாறு

அனக்காவூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நீடித்த வளர்ச்சி இலக்குகள் அடைவது குறித்த அனைத்துத்துறை அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. திருவண்ணாமலை மாவட்ட திட்டக்குழு அலுவலர் நா.அறவாழி தலைமை தாங்கினார்.

திருவண்ணாமலை மாவட்ட புள்ளியியல் துணை இயக்குனர் பன்னீர்செல்வன் முன்னிலை வகித்தார். அனக்காவூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ரவி வரவேற்றார்.

இதில் செய்யாறு கோட்டத்திற்குட்பட்ட செய்யாறு, அனக்காவூர், வெம்பாக்கம், வந்தவாசி, பெரணமல்லூர், தெள்ளார், மேற்கு ஆரணி, ஆரணி மற்றும் சேத்துப்பட்டு வட்டாரங்களிலுள்ள வட்டார அளவிலான அனைத்துத்துறை அலுவலர்களும் பங்கேற்றனர்.

இதில் மாவட்ட குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் கந்தன், செய்யாறு கோட்ட புள்ளியியல் உதவி இயக்குனர் அழகப்பன் மற்றும் வட்டார அளவிலான அனைத்து துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர். முடிவில் மாவட்ட திட்டக் குழு புள்ளியியல் அலுவலர் சரவணன் நன்றி கூறினார்.


Next Story