சட்டம்-ஒழுங்கு பிரச்சினையை எதிர்கொள்வது குறித்துமத்திய தொழில் பாதுகாப்பு படையினர், திருக்கோவிலூர் போலீசாருடன் ஆலோசனை


சட்டம்-ஒழுங்கு பிரச்சினையை எதிர்கொள்வது குறித்துமத்திய தொழில் பாதுகாப்பு படையினர், திருக்கோவிலூர் போலீசாருடன் ஆலோசனை
x
தினத்தந்தி 10 Feb 2023 12:15 AM IST (Updated: 10 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

சட்டம்-ஒழுங்கு பிரச்சினையை எதிர்கொள்வது குறித்து மத்திய தொழில் பாதுகாப்பு படையினர், திருக்கோவிலூர் போலீசாருடன் ஆலோசனை நடத்தினர்.

கள்ளக்குறிச்சி

திருக்கோவிலூர்,

கோவையில் இருந்து துணை கமாண்டர் சிந்து தலைமையில் மத்திய தொழில் பாதுகாப்புபடை வீரர், வீராங்கனைகள் 20 பேர் அடங்கிய குழுவினர் கலவர தடுப்பு உபரகணங்களுடன் திருக்கோவிலூர் போலீஸ் நிலையத்துக்கு வந்தனர். பின்னா் அவர்கள் அவசர காலங்களில் தங்களின் பணி குறித்து போலீசாரிடம் விளக்கினர். மேலும் சுற்றுவட்டார பகுதிகளில் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை குறித்து கேட்டறிந்ததுடன், அவற்றை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்து போலீசாருக்கு ஆலோசனை வழங்கினர். அப்போது திருக்கோவிலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பழனி, இன்ஸ்பெக்டர் பாபு, சப் இன்ஸ்பெக்டர் சிவச்சந்திரன் மற்றும் போலீசார் உடன் இருந்தனர்.


Next Story