ஆலோசனை கூட்டம்


ஆலோசனை கூட்டம்
x

பாரதிய மின் தொழிலாளர் சம்மேளன ஆலோசனை கூட்டம் நடந்தது.

திருநெல்வேலி

நெல்லை வண்ணார்பேட்டையில் பாரதிய மின் தொழிலாளர் சம்மேளன ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. நெல்லை திட்ட தலைவர் சுப்புராயன் தலைமை தாங்கினார். செயலாளர் சங்கரசுப்பு முன்னிலை வகித்தார். மாநில துணைத்தலைவர் கனிகுமார் கலந்து கொண்டு செயல்பாடுகள் குறித்து பேசினார்.

கூட்டத்தில், மின் தொழிலாளர்கள், அலுவலர்கள், என்ஜினீயர்கள், ஓய்வூதியர்களின் எதிர்கால பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்கும் முத்தரப்பு ஒப்பந்தம் செய்ய வேண்டும். இதை வலியுறுத்தி வருகிற 27-ந் தேதி முதல் ஜூலை மாதம் 5-ந் தேதி வரை கோட்ட அளவில் வாயிற் கூட்டங்கள் நடத்த வேண்டும். 8-ந் தேதி அனைத்து மேற்பார்வை பொறியாளர் அலுவலகங்கள் முன்பு கோரிக்கை விளக்க வாயிற்கூட்டம் நடத்த வேண்டும் என்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் கோட்ட நிர்வாகிகள் தென்காசி பாலசுப்பிரமணியன், குணசேகரன், வள்ளியூர் சுடர்மணி, கல்லிடைக்குறிச்சி இசக்கி, மதிப்பீட்டு அலுவலர்கள் சிவசுப்பிரமணியன், மகாராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பொருளாளர் மகேந்திரன் நன்றி கூறினார்.


Next Story