வணிகர்களுக்கான ஆலோசனை கூட்டம்
கள்ளக்குறிச்சியில் வணிகர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடந்தது.
கள்ளக்குறிச்சியில் தொழிலாளர் நலத்துறை சார்பில் வணிகர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதற்கு சேம்பர் ஆப் காமர்ஸ் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மேற்கு மாவட்ட தலைவர் ஸ்ரீதர் தலைமை தாங்கினார்.
சிறப்பு அழைப்பாளர்களாக விழுப்புரம் தொழிலாளர் நலத்துறை துணை ஆணையர் ஆனந்தன், கள்ளக்குறிச்சி ஆய்வாளர் சிவக்குமார் ஆகியோர் கலந்துகொண்டு தொழிலாளர் துறையின் வழிகாட்டு நெறிமுறைகள் பற்றி விளக்கி கூறினார். பின்னர் வணிகர்களின் சந்தேகங்களுக்கு விளக்கமளித்தார். இதில் கள்ளக்குறிச்சி சேம்பர் ஆப் காமர்ஸ் வணிகர் சங்கங்களின் பேரமைப்பினர், துணை ஆணையரிடம், வணிகர்கள் பயன்படுத்தும் தராசுகளுக்கு முத்திரை கட்டணம் 2 மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் வருடம் ஒருமுறை முத்திரை போட வேண்டும் என்கிற சட்டமும் உள்ளது. இதனால் வணிகர்கள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க தற்போது உள்ள முத்திரை கட்டணத்தில் 3 வருடத்திற்கு ஒரு முறை முத்திரை பதிவு செய்ய வேண்டும். அல்லது முத்திரை கட்டணத்தை குறைக்க வேண்டும் என்றனர்.
கூட்டத்தில் தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் மாநில கூடுதல் செயலாளர் வைத்திலிங்கம், மாவட்ட செயலாளர் முத்து, மாவட்ட பொருளாளர் சவுந்தர், மாவட்ட துணைத் தலைவர்கள் வரதராஜன், கோபி, மாவட்ட இணைச்செயலாளர்கள் மணிகண்டன், விஜயசேகர், அரிசி ஆலை அதிபர்கள் சங்க செயலாளர் சுப்பிரமணியன், அனைத்து வியாபாரிகள் சங்க தலைவர் செல்வகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.