மாண்டஸ் புயல் முன்னெச்சரிக்கை குறித்த அலோசனை கூட்டம்


மாண்டஸ் புயல் முன்னெச்சரிக்கை குறித்த அலோசனை கூட்டம்
x
தினத்தந்தி 8 Dec 2022 6:45 PM (Updated: 8 Dec 2022 6:46 PM)
t-max-icont-min-icon

மாண்டஸ் புயல் முன்னெச்சரிக்கை குறித்த அலோசனை கூட்டம் நடந்தது.

விழுப்புரம்

செஞ்சி:

மாண்டஸ் புயல் முன்னெச்சரிக்கை குறித்த ஆலோசனை கூட்டம் செஞ்சி பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இதற்கு பேரூராட்சி மன்ற தலைவர் மொக்தியார் மஸ்தான் தலைமை தாங்கினார். செயல் அலுவலர் ராமலிங்கம் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் பேரூராட்சி தலைவர் மொக்தியார் மஸ்தான் பேசுகையில், புயல் காரணமாக 3 நாட்கள் பலத்த மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஏதேனும் சேதம் ஏற்பட்டால் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்வதற்கு பேரூராட்சி பணியாளர்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும். செல்போன்களை சுவிட்ச்-ஆப் செய்யக்கூடாது.

மழை காரணமாக பொதுமக்கள் எந்த விதத்திலும் பாதிக்காத வகையில் பேரூராட்சி பணியாளர்கள் செயல்பட வேண்டும். மேலும் பாதிப்புகள் மற்றும் உதவிகள் குறித்து 444244489 என்ற வாட்ஸ்-அப் எண் மூலம் பேரூராட்சியை தொடர்பு கொள்ளலாம் என்றார். இதில் துப்புரவு ஆய்வாளர் பார்கவி, துப்புரவு மேற்பார்வையாளர்கள் ரமேஷ், செந்தில்குமார் உள்பட அனைத்து பணியாளர்களும் கலந்து கொண்டனர்.


Next Story