குமரியில்சாலை பாதுகாப்பு குறித்த ஆலோசனை கூட்டம்


குமரியில்சாலை பாதுகாப்பு குறித்த ஆலோசனை கூட்டம்
x

குமரியில் சாலை பாதுகாப்பு குறித்த ஆலோசனை கூட்டம் கலெக்டர் அரவிந்த் தலைமையில் நடந்தது.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

குமரியில் சாலை பாதுகாப்பு குறித்த ஆலோசனை கூட்டம் கலெக்டர் அரவிந்த் தலைமையில் நடந்தது.

கலந்தாய்வு கூட்டம்

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்து துறை அலுவலர்களுடான கலந்தாய்வு கூட்டம் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலக வருவாய் கூட்டரங்கில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் அரவிந்த் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழக அரசு உத்தரவு படி இருசக்கர வாகனங்களில் பயணம் செய்பவர்கள் ஹெல்மெட் அணிவது கட்டாயமாகும். எனவே அரசு பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் இருசக்கர வாகனங்களில் பயணம் மேற்கொள்ளும் போது ஹெல்மெட் அணியாமலும், 3 நபர்கள் சென்றாலும் அபராதம் விதிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதிவேகம் மற்றும் குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள போலீசாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

விபத்து விவரங்கள்

ஹெல்மெட் அணிவதன் மூலம் தனது உயிருக்கு மட்டுமல்லாது தனது குடும்பத்திற்கும் பாதுகாப்பான சூழ்நிலையை உருவாக்குவதில் அரசு அலுவலர்கள் பொதுமக்களுக்கு முன்மாதிரியாக நடந்து கொள்ள வேண்டும். கடந்த மாதம் மாவட்டத்தில் நடைபெற்ற விபத்துகளின் விவரம், அதற்கான காரணம், அதனை சரிசெய்வதற்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து வட்டார போக்குவரத்து அலுவலர் மற்றும் அனைத்துத்துறை அலுவலர்களிடையே விவாதிக்கப்பட்டது. மேலும் சாலை விபத்து அதிகமாக ஏற்படும் இடங்களில் விழிப்புணர்வு பதாகைகள் அமைக்கவும், பொது இடங்களில் அலங்கார வளைவுகள் வைத்தால் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும். அதிக ஒலி எழுப்பும் ஒலிப்பான்கள் இரவு நேரங்களில் அனுமதிக்கப்படாது. விபத்து ஏற்படும் இடங்களில் ஒளிரும் விளக்குகள், எச்சரிக்கை பலகை வைக்க வேண்டும். வேகத்தடை மற்றும் சாலையின் நடுப்பகுதியில் வெள்ளைக்கோடு ஏற்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி சிவப்பிரியா, பத்மநாபபுரம் சப்-கலெக்டர் அலர்மேல்மங்கை, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) வீராசாமி, நாகர்கோவில் கோட்டாட்சியர் சேதுராமலிங்கம், உசூர் மேலாளர் (குற்றவியல்) சுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story