நுகர்வோர் விழிப்புணர்வு பிரசார பயணம்
திருச்செந்தூரில் நுகர்வோர் விழிப்புணர்வு பிரசார பயணம் நடைபெற்றது.
திருச்செந்தூர்:
நுகர்வோர் குறை தீர்வு ஆணைய தலைவர் அறிவுறுத்தலின்படி திருச்செந்தூர் தேரடியில் தமிழ்நாடு நுகர்வோர் பேரவை சார்பில் நுகர்வோர் விழிப்புணர்வு பிரசார பயணம் தொடங்கியது. நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு நுகர்வோர் பேரவை மாநில தலைவர் மோகனசுந்தரம் தலைமை தாங்கினார். விழிப்புணர்வு பிரசார பயணத்தை திருச்செந்தூர் கோவில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் சுரேஷ், முருகன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். திருச்செந்தூர் தாலுகாவிற்குட்பட்ட இடங்களுக்கு செல்லும் இந்த விழிப்புணர்வு பொதுமக்களுக்கு பயன் தரும் விதத்தில் துண்டு பிரசுரங்களும் வினியோகிக்கப்பட்டது. நிகழ்ச்சியில், அரசு வக்கீல் சாத்ராக், நுகர்வோர் பேரவை மாவட்ட அமைப்பாளர் திருப்பதி விஜி, திருச்செந்தூர் வட்டார தலைவர் ரஹ்மத்துல்லா, வட்டார அமைப்பாளர் மாரிமுத்து சுவாமிகள், வட்டார செயலாளர் சக்திவேல், திருச்செந்தூர் நகர தலைவர் ராஜமாதாங்கன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.