நுகர்பொருள் வாணிப கழக ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்


நுகர்பொருள் வாணிப கழக ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்
x

நுகர்பொருள் வாணிப கழக ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூர்

தஞ்சையில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளர் அலுவலகம் முன்பு நுகர்பொருள் வாணிப கழக ஓய்வு பெற்ற பணியாளர்கள் நேற்று மதியம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு மாவட்ட ஓய்வூதியர்கள் போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் கோவிந்தராஜன் தலைமை தாங்கினார். ஏ.ஐ.டி.யூ.சி. மாநிலச் செயலாளர் சந்திரகுமார் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். ஏ.ஐ.டி.யூ.சி. மாவட்ட பொதுச் செயலாளர் தில்லைவனம் ஆர்ப்பாட்டத்தை முடித்து வைத்து பேசினார். கோரிக்கைகளை விளக்கி நுகர் பொருள் சங்க சி.ஐ.டி.யூ. மண்டல செயலாளர் பாண்டித்துரை, அரசு போக்குவரத்து சங்க மாநில துணைத் தலைவர் துரை.மதிவாணன், மாநில குழு உறுப்பினர் கஸ்தூரி, நுகர் பொருள் வாணிப கழக போராட்ட குழுவை சார்ந்த வேணுகோபாலன், முருகேசப்பிள்ளை, மாரியப்பன், தியாகராஜன், ஞானசேகரன் உள்ளிட்ட நிர்வாகிகள் பேசினர். ஆர்ப்பாட்டத்தில், வருங்கால வைப்புநிதி மூலம் வழங்கப்படுகின்ற ரூ.1000 முதல் ரூ.3 ஆயிரம் வரை சொற்ப ஓய்வூதியத்தை கொண்டு மருத்துவச்செலவு, அன்றாட அடிப்படை செலவுகளை ஈடு செய்ய இயலாது. எனவே நுகர்பொருள் வாணிபக்கழக ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு நிர்வாகத்தின் பரிந்துரையை ஏற்று ஊக்க ஓய்வூதியம் மாதம் ரூ.4 ஆயிரம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வலியுறுத்தப்பட்டது


Next Story