மசினகுடி அருகே நுகர்வோர் பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம்


மசினகுடி அருகே நுகர்வோர் பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம்
x
தினத்தந்தி 21 Sept 2022 12:15 AM IST (Updated: 21 Sept 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

மசினகுடி அருகே நுகர்வோர் பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.

நீலகிரி

கூடலூர்

மசினகுடி நுகர்வோர் பாதுகாப்பு சங்கத்தின் சார்பாக வாழைத்தோட்டம் ஜி. ஆர். ஜி. நினைவு மேல்நிலைப்பள்ளியில் மாணவ- மாணவிகளுக்கு நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் உரிமைகள் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. நுகர்வோர் சங்க தலைவர் பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் ஷஹானஜ் இராணி, தமிழ்நாடு- பாண்டிச்சேரி நுகர்வோர் கூட்டமைப்பின் மாநில துணைத் தலைவர் பிரதீப்குமார், பள்ளி தலைமை ஆசிரியர் குமரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தொடர்ந்து நுகர்வோர் குடியுரிமை மன்றம் தொடங்கப்பட்டு நுகர்வோர் பாதுகாப்பு - உரிமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. நுகர்வோர் பாதுகாப்பு சட்டம், உலகம் மாசுபடுவதை பற்றியும், அதை எப்படித் தடுக்க முடியும் என்பது குறித்தும் விளக்கப்பட்டது. தொடர்ந்து மசினகுடி அரசு மேல்நிலை பள்ளியில் உதவி தலைமை ஆசிரியர் சிவகுமார் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ஜெர்மினா, மசினகுடி சரக வனவர் சித்தராஜ் ஆகியோர் பேசினர். பின்னர் மரக்கன்றுகள் நடப்பட்டது. முடிவில் மசினகுடி நுகர்வோர் பாதுகாப்பு சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜெயக்குமார் நன்றி கூறினார்.


Next Story