நுகர்வோர் பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்
எட்டயபுரம் அருகே சிந்தலக்கரை கிராமத்தில் நுகர்வோர் பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது.
எட்டயபுரம்:
எட்டயபுரம் அருகே உள்ள சிந்தலக்கரை கிராமத்தில் தனியார் திருமண மண்டபம் அருகே திருப்பதி கியாஸ் சர்வீஸ் சார்பில் நுகர்வோர் பாதுகாப்பு விழிப்புணா்வு கருத்தரங்கம் நடந்தது. கருத்தரங்கிற்கு திருப்பதி கியாஸ் உரிமையாளர் சீனிவாசன் தலைமை தாங்கினார். சிந்தலக்கரை பஞ்சாயத்து தலைவர் அய்யாதுரை முன்னிலை வகித்தார். கருத்தரங்கில் சமையல் எரிவாயுவை எப்படி பயன்படுத்துவது? என்பது குறித்தும், மேலும் கசிவு ஏற்பட்டால் அதை எப்படி கையாளுவது? என்பது குறித்தும் செய்முறை விளக்க பயிற்சி அளிக்கப்பட்டது.
கருத்தரங்கில் சிறப்பு அழைப்பாளராக மதுரை இந்தியன் ஆயில் மண்டல மேலாளர் வண்ணப்பிள்ளை கோபாலன் பேசுகையில், "கியாஸ் கசிவு ஏற்பட்டால் அலுவலகத்தை தொடர்பு கொள்ள வேண்டும். 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை டியூப் மாற்ற வேண்டும். எரிவாயுவை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்" என்றார்.
நிகழ்ச்சியில் பஞ்சாயத்து துணைத் தலைவர் சந்திரசேகர், திருப்பதி கியாஸ் மேலாளர் மூர்த்தி மற்றும் பணியாளர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.