நுகர்வோர் பாதுகாப்பு மையத்தினர் ஆர்ப்பாட்டம்


நுகர்வோர் பாதுகாப்பு மையத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 26 Jan 2023 12:15 AM IST (Updated: 26 Jan 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

கள்ளக்குறிச்சியில் நுகர்வோர் பாதுகாப்பு மையத்தினர் ஆர்ப்பாட்டம்

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி

மக்கள் உரிமை நுகர்வோர் பாதுகாப்பு மையம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் கள்ளக்குறிச்சி கச்சேரி சாலையில் நடைபெற்றது. இதற்கு பொதுச் செயலாளர் சக்திவேல் தலைமை தாங்கினார். துணை பொதுச்செயலாளர் கல்யாணசுந்தரம், துணைதலைவர் பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக நிறுவன பொதுச்செயலாளர் செல்வராஜ் கலந்துகொண்டு அரசு சம்பளம் பெறுபவர், அரசு ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களின் பிள்ளைகளை அரசு பள்ளியில் படிக்க வைக்க சட்டம் இயற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோாிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட தலைவர் நியாசுல்லா, செயலாளர் ஆறுமுகம் மற்றும் நிர்வாகிகள் ஜாபர்அலி, காமராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story