நுகர்வோர் பாதுகாப்பு குழு கூட்டம்
நுகர்வோர் பாதுகாப்பு குழு கூட்டம் நடைபெற்றது
சாத்தூர் நகராட்சி அலுவலகத்தில் கமிஷனர் ஜெகதீஸ்வரி தலைமையில் நுகர்வோர் பாதுகாப்பு குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு குழு உறுப்பினர் அழகு சுந்தரம் உள்ளிட்ட உறுப்பினர்கள் நகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் சாத்தூர் பகுதியில் சாலையோர பாஸ்ட் புட் கடைகள் அதிகரித்து விட்டதாகவும், இவற்றில் உணவின் தரம் உறுதி செய்யப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. மேலும் பாலிதீன் பயன்பாடு அதிகம் இருக்கும் நிலையில் அவற்றை ஒழிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டது. தெரு நாய் தொல்லை அதிகம் இருப்பதால் அதனை ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சாத்தூர் ெரயில் நிலைய சாலையை முறையாக பராமரிக்க வேண்டும் என்றும் இக்கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. உரிய நடவடிக்கை எடுப்பதாக கமிஷனர் ஜெகதீஸ்வரி உறுதி அளித்தார்.