நுகர்வோர் பாதுகாப்பு குழு கூட்டம்


நுகர்வோர் பாதுகாப்பு குழு கூட்டம்
x

கூத்தாநல்லூரில் நுகர்வோர் பாதுகாப்பு குழு கூட்டம் நடந்தது.

திருவாரூர்

கூத்தாநல்லூர்:

கூத்தாநல்லூரில் தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு குழு கூட்டம் நகர துணை தலைவர் ராமதாஸ் தலைமையில் நடந்தது.. நிர்வாகிகள் கண்ணன், அறிவழகன், மைதீன், அகிலாண்டபரமேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூத்தாநல்லூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கூடுதல் கழிவறை கட்டித்தர வேண்டும். ஆசிரியர் பற்றாக்குறையை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதியில் நிற்கும் மழை நீர் வடிகால் பணிகளை மழை காலம் தொடங்குவதற்கு முன்பே முடிக்க நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. இதில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக செயலாளர் கருணாநிதி வரவேற்றார். முடிவில் நிர்வாகி தனபாலன் நன்றி கூறினார்.

---


Next Story