நுகர்வோர் பாதுகாப்பு குழு கூட்டம்
ராணிப்பேட்டை மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு குழு கூட்டம் இன்று நடக்கிறது.
ராணிப்பேட்டை
ராணிப்பேட்டை மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு குழு கூட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 3 மணியளவில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டரங்கில் நடைபெற உள்ளது. கூட்டத்தில் ரேஷன் கடைகளின் செயல்பாடுகளை மேம்படுத்தவும், குறைபாடுகளை களையவும், பொது விநியோகத் திட்டத்தின் மூலம் விநியோகம் செய்யப்படும் குடிமை பொருள்கள் அனைத்தும் சீரான அளவில் விநியோகம் நடைபெறவும், விற்பனையாளர்கள் மீது வரக்கூடிய புகார்களை விசாரணை செய்யும் பொருட்டும், மேலும் இக்கூட்டத்தில் நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் அங்காடிகளின் செயல்பாடுகள் குறித்து விவாதிக்கலாம். குறைகள் இருப்பின் இந்த நுகர்வோர் கூட்டத்தில் பொதுமக்கள் கலந்து கொண்டு பயன் பெறலாம்.
இந்த தகவலை மாவட்ட கலெக்டர் வளர்மதி தெரிவித்தார்.
Related Tags :
Next Story