மாணவர்களுக்கு நுகர்வோர் உரிமை விழிப்புணர்வு


மாணவர்களுக்கு நுகர்வோர் உரிமை விழிப்புணர்வு
x
தினத்தந்தி 16 March 2023 12:15 AM IST (Updated: 16 March 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கரியசோலை அரசு பள்ளியில் மாணவர்களுக்கு நுகர்வோர் உரிமை விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

நீலகிரி

பந்தலூர்,

பந்தலூர் அருகே கரியசோலை அரசு உயர்நிலைப்பள்ளி குடிமக்கள் நுகர்வோர் மன்றம் சார்பில், உலக நுகர்வோர் உரிமை தினத்தையொட்டி விழிப்புணர்வு நிகழ்ச்சி பள்ளியில் நடைபெற்றது. இதற்கு பள்ளி தலைமை ஆசிரியர் குளோரோ புளோரி தலைமை தாங்கினார். ஆசிரியை மார்கிரேட் மேரி வரவேற்றார். பள்ளி குடிமக்கள் நுகர்வோர் மன்ற பொறுப்பு ஆசிரியர் மணிவாசகம் உலக நுகர்வோர் உரிமை தினம் கொண்டாடுவதன் நோக்கம் மற்றும் பள்ளி குடிமக்கள் நுகர்வோர் மன்றத்தின் செயல்பாடுகள், இன்றைய நிலையில் நுகர்வோர்களுக்கு உள்ள உரிமைகள் மற்றும் இந்திய அரசால் செயல்படுத்தப்பட்டு உள்ள சட்டங்களை பற்றி விளக்கினார். மாணவர்கள் தங்களது சந்தேகங்களை கேட்டு தெரிந்துகொண்டனர். நிகழ்ச்சியில் 6 முதல் 8-ம் வகுப்பு வரை உள்ள 60 மாணவர்கள் கலந்துகொண்டனர். முடிவில் மாணவி காவியா நன்றி கூறினார்.


Next Story