மனைவியுடன் கள்ளத்தொடர்பு இருக்குமோ? என சந்தேகம் - உறவினரை கொன்று பெருங்குடி ஏரியில் வீசிய தொழிலாளி
மனைவியுடன் கள்ளத்தொடர்பு இருக்குமோ என்ற சந்தேகத்தில் உறவினரை கொன்று ஏரியில் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
சென்னை,
சென்னையை அடுத்த பெருங்குடி ஏரிக்கரை தெருவில் வசித்துவருபவர் விஜயகாந்த். இவரது மனைவி ரேனுகா. ரேனுகாவின் உறவினரான ராஜீவ்காந்தி வேலூரில் வேலை இல்லாமல் சுற்றி கொண்டிருந்திருக்கிறார். இதனால் கடந்த 3 மாதங்களுக்கு முன்பாக வேலை தேடி சென்னைக்கு வந்துள்ளார். அவருக்கு விஜயகாந்த் வேலை ஒன்றை வாங்கி கொடுத்து அவரது வீட்டிலையே தங்க வைத்திருக்கிறார்.
இந்நிலையில் கடந்த 16 ஆம் தேதி வழக்கம் போல் வேலைக்கு சென்ற ராஜீவ்காந்தி வீட்டிற்கு திரும்பவில்லை. இதனால் ரேனுகா மற்றும் அவரது கணவர் விஜயகாந்த் துரைப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் பெருங்குடி ஏரியில் ஆண் சடலம் ஒன்று கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் அங்கு சென்று சடத்தை மீட்ட போலீசார் அது ராஜீவ்காந்தி என்பதை உறுதி செய்தனர்.
அதன் பின்னர் அவரது உடலை பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பரிசோதனைக்கு பின்னர் ராஜீவ்காந்தியின் கழுத்தில் காயம் இருப்பது தெரியவந்தது. இதனால் போலீசார் அவரது உறவினரான ரேனுகா மற்றும் விஜயகாந்த் இருவரையும் அழைத்து விசாரணை நடத்தியுள்ளனர். அதில் விஜயகாந்த் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் அவர் மீது போலீசாருக்கு சந்தேகம் வந்துள்ளது. பின்னர் போலீசார் தங்களது பாணியில் விசாரணை செய்ததில் விஜயகாந்திடம் இருந்து பல திடுக்கிடம் தவல்கள் வெளியாகின.
ராஜீவ்காந்தி அங்கு கட்டுமான வேலைக்கு சென்று வந்துள்ளார் . சில நாட்கள் வேலைக்கு சென்ற அவர் அதன் பின்னர் வேலைக்கு செல்லாமல் குடிக்கு அடிமையாகி வீட்டிலையே இருந்துள்ளார். இதனால் தனது மனைவி ரேனுகாவிடம் ராஜீவ்காந்தி தகாத உறவில் இருக்கிறாரோ என விஜயகாந்துக்கு சந்தேகம் வந்துள்ளது. இதனால் விஜயகாந்த் ராஜீவ்காந்தியிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.
சம்பவத்தன்று இரவு இருவரும் பெருங்குடி ஏரி அருகே சென்று மது அருந்தியுள்ளனர். மது போதையில் இருந்த விஜயகாந்த் தனது மனைவியுடனான தகாத உறவு குறித்து தகராறில் ஈடுபட்டுள்ளார். பின்னர் ஆத்திரம் அடைந்த அவர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் ராஜீவ்காந்தியின் கழுத்தில் குத்தியிருக்கிறார். இதனால் சம்பவ இடத்திலேயே ராஜீவ்காந்தி உயிரிழந்துள்ளார். பின்னர் உடலை ஏரியில் வீசியுள்ளார் விஜயகாந்த்.
இதனை மறைக்க ராஜீவ்காந்தியை தானும் தேடுவதுபோல் நடித்து வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. அதன் பிறகு அவரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.