மலைப்பாதையில் கண்டெய்னர் லாரி கவிழ்ந்து விபத்து
மலைப்பாதையில் கண்டெய்னர் லாரி கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.
வேலூர்
ராஜஸ்தான் மாநிலத்திலிருந்து சென்னைக்கு புறப்பட்ட கன்டெய்னர் லாரி ஆந்திரா மாநிலம் வழியாக வந்தது. அதனை அந்த மாநிலத்ைத சேர்ந்த டிரைவர்சர்ஜார் (வயது 38) ஓட்டி வந்தார். கிளீனராக காளிராம் (30) இருந்தார். அந்த லாரி தமிழக எல்லையான பேரணாம்பட்டு அருகே உள்ள பத்தலபல்லி மலைப்பாதையில் முதலாவது வளைவில் வந்தபோது பிரேக் செயலிழந்தது. இந்த நிலையில் கட்டுப்பாட்டை இழந்த லாரி தறிகெட்டு ஓடி இடது புற தடுப்பு சுவரில் மோதி இரண்டு வளைவுகளுக்கிடையிலுள்ள மரங்கள் உள்ள பகுதியில் கவிழ்ந்தது. அப்போது டிரைவர் சர்ஜார், கிளீனர் காளிராம் ஆகியோர் கீழே குதித்து லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். இதுகுறித்து பேரணாம்பட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story