காவிரி படுகை பாதுகாப்பு கூட்டியக்கம் சார்பில் தொடர் முழக்க போராட்டம்
கர்நாடக அரசை கண்டித்து திருவாரூரில் காவிரி படுகை பாதுகாப்பு கூட்டியக்கம் சார்பில் தொடர் முழக்க போராட்டம் நடந்தது.
கர்நாடக அரசை கண்டித்து திருவாரூரில் காவிரி படுகை பாதுகாப்பு கூட்டியக்கம் சார்பில் தொடர் முழக்க போராட்டம் நடந்தது.
தொடர் முழுக்க போராட்டம்
குறுவை பயிர்கள் காய்ந்து வரும் நிலையில், சம்பா சாகுபடியை தொடங்க வேண்டிய நிலையில் காவிரி நீரை வழங்கிடாத கர்நாடக அரசை கண்டித்தும், காய்ந்து போன குறுவை பயிருக்கு ஏக்கருக்கு ரூ.35 ஆயிரம் வழங்கிட கோரியும் காவிரி படுகை பாதுகாப்பு கூட்டியக்கம் சார்பில் தொடர் முழக்க போராட்டம் நடத்துவதாக அறிவித்திருந்தனர்.
அதன்படி நேற்று திருவாரூர் ரெயில் நிலையம் முன்பு காவிரி படுகை பாதுகாப்பு கூட்டியக்கம் சார்பில் தொடர் முழுக்க போராட்டம் நடந்தது. போராட்டத்திற்கு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் மாசிலாமணி, விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் சேகர் ஆகியோர் தலைமை தாங்கினர். மாவட்ட செயலாளர்கள் கந்தசாமி, பாஸ்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முழு அடைப்பு...
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில கட்டுப்பாட்டுக்குழு உறுப்பினர் பழனிச்சாமி, திருத்துறைப்பூண்டி எம்.எல்.ஏ. மாரிமுத்து, முன்னாள் எம்.எல்.ஏ. உலகநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக விவசாயிகள் சங்க மாநில பொதுச்செயலாளர் மாசிலாமணி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- தமிழகத்திற்கு காவிரி நீரை கர்நாடக அரசு திறந்துவிட சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட வேண்டும். இல்லையேல் காவிரி டெல்டா மாவட்டங்களில் முழு அடைப்பு போராட்டத்தை நடத்துவது என காவிரி படுகை பாதுகாப்பு கூட்டியக்கம் சார்பில் முடிவு எடுத்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.