விஜயகாந்துக்கு 3வது நாளாக தொடர் சிகிச்சை


விஜயகாந்துக்கு 3வது நாளாக தொடர் சிகிச்சை
x

விஜயகாந்துக்கு அவ்வப்போது செயற்கை சுவாசம் தரப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.

சென்னை,

தேமுதிக தலைவர் விஜயகாந்த் மார்புசளி, இடைவிடாத இருமல் காரணமாக கடந்த சனிக்கிழமை அன்று சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில், விஜயகாந்துக்கு இன்று 3வது நாளாக தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விஜயகாந்துக்கு அவ்வப்போது செயற்கை சுவாசம் தரப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது. உடல்நல பரிசோதனைக்கு பிறகு நாளை மறுநாள் வீடு திரும்புவார் என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


Next Story