பாதாள சாக்கடை மூடி வழியாக தொடர்ந்து வெளியேறும் கழிவுநீர்


பாதாள சாக்கடை மூடி வழியாக தொடர்ந்து வெளியேறும் கழிவுநீர்
x

வேலூரில் பாதாள சாக்கடை மூடி வழியாக 3-வது நாளாக தொடர்ந்து கழிவுநீர் வெளியேறியது.

வேலூர்

வேலூர் நேஷனல் தியேட்டர் சந்திப்பு அருகே சாலையில் உள்ள பாதாள சாக்கடை மூடி வழியாக மழை பெய்யும்போது கடந்த சில நாட்களாக கழிவுநீர் வெளியேறி வருகிறது. நேற்றும் பலத்த மழை பெய்ததால் பாதாள சாக்கடையில் கழிவுநீருடன் மழைநீர் சேர்ந்து மூடி வழியாக அதிகமான தண்ணீர் வெளியேறி சாலையில் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் அந்த பகுதியில் பேரிகார்டுகள் வைக்கப்பட்டது. தண்ணீர் வெளியேறியதால் பஸ்கள் பழைய பைபாஸ் சாலை வழியாக திருப்பி விடப்பட்டது. வாகனங்கள் அனைத்தும் ஊர்ந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. அங்கு போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. பாதாள சாக்கடை மூடி வழியாக கழிவுநீர் வெளியேறாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.


Next Story