தொடர் விடுமுறை : சென்னையிலிருந்து நேற்று ஒரே நாளில் 1.42 லட்சம் பேர் வெளியூர்களுக்கு பயணம்
நேற்று ஒரே நாளில் சென்னையில் இருந்து 1,42,062 பயணிகள் பஸ்களில் தங்கள் சொந்த ஊருக்கு பயணம் செய்துள்ளனர்
சென்னை,
நாட்டின் சுதந்திரதினம் வரும் திங்கள்கிழமை கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, பல்வேறு நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வார விடுமுறை நாட்களான சனி, ஞாயிறு மற்றும் திங்கள்கிழமை சுதந்திரதினம் என மொத்தம் 3 நாட்கள் விடுமுறை என்பதால் சென்னையில் இருந்து மக்கள் தங்கள் சொந்த ஊருக்கு சென்றுகொண்டிருக்கின்றனர்.
இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் சென்னையில் இருந்து 1,42,062 பயணிகள் பஸ்களில் தங்கள் சொந்த ஊருக்கு பயணம் செய்துள்ளனர் என போக்குவரத்து துறை தகவல் தெரிவித்துள்ளது.
நேற்று சென்னை இருந்து வெளியூர்களுக்கு 2732 பஸ் இயக்கப்பட்டது.இதில் திருச்சி , மதுரை மற்றும் சேலம்திற்கு அதிகமான பயணிகள் பயணம் செய்துள்ளனர் என போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.
Related Tags :
Next Story