ஆலங்குளம் பகுதியில் தொடர்மழை


ஆலங்குளம் பகுதியில் தொடர்மழை
x

ஆலங்குளம் பகுதியில் தொடர்மழையினால் பொதுமக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

விருதுநகர்

ஆலங்குளம்,

ஆலங்குளம் பகுதியில் தொடர்மழையினால் பொதுமக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

கன மழை

ஆலங்குளம், தொம்பகுளம். ரெட்டிய பட்டி, கீழராஜகுலராமன், சாமிநாதபுரம், நல்லக்கம்மாள்புரம், காளவாசல், கரிசல்குளம், கொங்கன்குளம், சங்கரமூர்த்தி பட்டி, ராசாப்பட்டி, கண்மாய்பட்டி, வலையபட்டி, மேலாண்மறைநாடு, அப்பயநாயக்கர்பட்டி, கீழாண்மறைநாடு, ஏ.லட்சுமிபுரம், சுண்டங்குளம், புளியடிபட்டி, கோபாலபுரம், கல்லமநாயக்கர்பட்டி, மாதாங்கோவில்பட்டி, உப்புபட்டி, காக்கிவாடன்பட்டி, எதிர்கோட்டை, எட்டக்காபட்டி, குண்டாயிருப்பு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை 3.30.மணி முதல் 4.30 மணிவரை இடியுடன் கூடிய கன மழை பெய்தது.

இப்பகுதியில் உள்ள சிறிய ஓடை, கண்மாய்களில் நீர்வரத்து தொடங்கி உள்ளது.

பொதுமக்கள் மகிழ்ச்சி

தொம்பகுளம், கொங்கன்குளம், ரெட்டியபட்டி ஆகிய பகுதிகளில் எள், உளுந்து போன்ற பயிர்கள் விளைந்து உள்ளது. எள் செடியில் விளைந்த எள்ளை எடுக்க முடியாத நிலை உள்ளது. இந்த மழை தொடர்ந்து பெய்வதால் செடிகள் கீழே சாய்ந்துவிடும் நிலை உள்ளது. உளுந்து மகசூலில் விளைந்த பருப்பு மகசூலை எடுக்க முடியாமலும், இனிமேல் உளுந்துசெடியில் புதிதாக காய்கள் கட்ட முடியாத நிலையும் ஏற்பட்டு உள்ளது. தொடர்ந்து ஆலங்குளம் பகுதியில் மழை பெய்து வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.


Related Tags :
Next Story