குளித்தலையில் தொடர் மழை


குளித்தலையில் தொடர் மழை
x

குளித்தலையில் தொடர் மழை பெய்தது.

கரூர்

குளித்தலை மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. பகலில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் போது சாரல் மழை பெய்து வருகிறது. சில நேரங்களில் வெயில் அடிக்கும் போது மழை பெய்கிறது. இந்தநிலையில் நேற்று அதிகாலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. அவ்வப்போது லேசான மழை விட்டு விட்டு பெய்து கொண்டிருந்தது. மாலை நேரத்தில் மிதமான மழை பெய்தது. இதனால் நேற்று வாரச்சந்தையில் காய்கறி வியாபாரிகள் மழையில் நனைந்தபடியே வியாபாரம் செய்தனர். பொதுமக்கள் குடையை பிடித்தபடி கடைகளுக்கு சென்று வந்தனர். குளித்தலை பகுதியில் விட்டுவிட்டு மழை பெய்ததால் இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் சாலையோர வியாபாரிகள் பாதிக்கப்பட்டனர்.


Related Tags :
Next Story