அரியலூர், ஜெயங்கொண்டம் நகராட்சியில் பணிபுரியும் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் உண்ணாவிரதம்
அரியலூர், ஜெயங்கொண்டம் நகராட்சியில் பணிபுரியும் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்.
அரியலூர்
அரியலூர், ஜெயங்கொண்டம் நகராட்சியில் பணிபுரியும் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் சங்கம் சார்பில் அரியலூர் பஸ் நிலையம் எதிரில் கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் நடந்தது. இதற்கு சங்க தலைவர் தண்டபாணி தலைமை தாங்கினார். ஏ.ஐ.டி.யு.சி. மாநில குழு உறுப்பினர் ராமச்சந்திரன் போராட்டத்தை தொடங்கி வைத்தார். உண்ணாவிரதம் குறித்து சங்க நிர்வாகிகள் கூறுகையில், இ.எஸ்.ஐ. மருத்துவ அடையாள அட்டைகள் வழங்க வேண்டும், 10 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்தவர்களை பணியில் இருந்து நீக்க அறிவிக்கப்பட்டு இருக்கும் அரசாணையை ரத்து செய்வதுடன், அவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், கொரோனா காலத்தில் களப்பணி புரிந்த அனைவருக்கும் அரசு அறிவித்த ஊக்க ஊதியம் வழங்கிட வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் நடந்தது என்றனர்.
Related Tags :
Next Story