கரும்பு டிராக்டர் மோதி ஒப்பந்ததாரர் பலி


கரும்பு டிராக்டர் மோதி ஒப்பந்ததாரர் பலி
x
தினத்தந்தி 11 May 2023 12:15 AM IST (Updated: 11 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

விக்கிரவாண்டி அருகே கரும்பு டிராக்டர் மோதி ஒப்பந்ததாரர் பலியானார்.

விழுப்புரம்

விக்கிரவாண்டி:

கடலூர் புதுப்பாளையம் நபிகள் நாயகம் தெருவில் வசித்து வருபவர் ஷாகிதா கான்(வயது 54). இவர் வீடு கட்டி கொடுக்கும் ஒப்பந்ததாரராகவும், ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வந்தார்.

இவர் நேற்று மதியம் 2 மணியளவில் முண்டியம்பாக்கம் ஒரத்தூர் சாலையில் உள்ள ஒரு மசூதியில் தொழுகை செய்தார். பின்னர் அங்கிருந்து தனது மோட்டார் சைக்கிளில் முண்டியம்பாக்கம் நோக்கி புறப்பட்டார்.

டிராக்டர் மோதி பலி

அப்போது பழைய கருவாச்சியில் இருந்து கரும்பு ஏற்றிக்கொண்டு முண்டியம்பாக்கம் தனியார் சர்க்கரை ஆலைக்கு சென்ற டிராக்டர், எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் ஷாகிதாகான் படுகாயமடைந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி ஷாகிதா கான் பரிதாபமாக இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் விக்கிரவாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து டிராக்டர் டிரைவரான சிகாமணி என்பவரை கைது செய்தனர்.


Next Story