பயிர் வேர் அழுகல் நோயை கட்டுப்படுத்தும் வழிமுறை


பயிர் வேர் அழுகல் நோயை கட்டுப்படுத்தும் வழிமுறை
x
தினத்தந்தி 17 July 2023 12:45 AM IST (Updated: 17 July 2023 12:45 AM IST)
t-max-icont-min-icon

பயிர் வேர் அழுகல் நோயை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து கொள்ளிடம் வட்டார வேளாண் உதவி இயக்குனர் எழில்ராஜா விளக்கம் அளித்துள்ளார்.

மயிலாடுதுறை

பயிர் வேர் அழுகல் நோயை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து கொள்ளிடம் வட்டார வேளாண் உதவி இயக்குனர் எழில்ராஜா விளக்கம் அளித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

பூஞ்சாணம்

டிரைக்கோடெர்மா விரிடி என்ற பூஞ்சாணம் பயிர்களை தாக்கும் பல நோய்களில் இருந்து பாதுகாக்கிறது. இந்த பூஞ்சாணம் வேர் அழுகல் நோய், வாடல் நோய் போன்ற நோய்களை உண்டாக்கும் நோய் காரணிகளை அழிக்கிறது. இதை பயன்படுத்தி வேர் அழுகல் போன்ற நோய்களை கட்டுப்படுத்த முடியும்.

மண் மூலம் பரவும் நோய் காரணிகளை பயிர் வளரும் காலம் முழுவதும் வேர் பகுதியில் இருந்து கொண்டு இந்த பூஞ்சாணம் அழிக்கிறது. பிற உயிர் உரங்களான அசோஸ்பைரில்லம், பாஸ்போபாக்டீரியம், ரைசோபியம் போன்றவற்றுடன் கலந்து இதனை பயன்படுத்தலாம்.

நிலக்கடலை- உளுந்து

நிலக்கடலை, கொண்டக்கடலை, உளுந்து, பச்சைப்பயறு, துவரை, பருத்தி, சூரியகாந்தி, எள், சோயாமொச்சை போன்ற பயிர்களுக்கும் இந்த பூஞ்சாணத்ைத பயன்படுத்தி, நோய் பாதிப்பில் இருந்து அவற்றை பாதுகாக்கலாம்.

ஒரு கிலோ விதைக்கு 4 கிராம் என்ற அளவில் விதை நேர்த்தி செய்து கொள்ள வேண்டும். விவசாயிகள் இதனை வாங்கி பயனடையலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story