பஸ் படிக்கட்டில் பயணம் செய்வதில் தகராறு


பஸ் படிக்கட்டில் பயணம் செய்வதில் தகராறு
x

திருக்கோவிலூர் அருகே பஸ் படிக்கட்டில் பயணம் செய்வதில் ஏறபட்ட தகராறில் 9 மாணவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி

திருக்கோவிலூர்,

திருக்கோவிலூர் அருகே எல்ராம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர்கள் 17 வயதுடைய பிளஸ்-2 மாணவர்கள் 2 ேபர். இவர்கள் திருக்கோவிலூர் அரசு ஆண்கள் பள்ளியில் படித்து வருகின்றனர். இந்த நிலையில் பள்ளிக்கு செல்வதற்காக எல்ராம்பட்டு கூட்டுரோட்டில் மாணவர்கள் 2 பேரும் காத்திருந்தனர். அப்போது திருக்கோவிலூர் நோக்கி சென்ற தனியார் பஸ்சில் அவர்கள் ஏற முயன்றனர். இதில் பஸ் படிக்கட்டில் பயணம் செய்வது தொடர்பாக இவர்களுக்கும், எடப்பாளையம் கிராமத்தை சேர்ந்த 9 பள்ளி மாணவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த எடப்பாளையம் கிராமத்தை சேர்ந்த மாணவர்கள் ஒன்று சேர்ந்து, எல்ராம்பட்டு கிராமத்தை சேர்ந்த 2 மாணவர்களில் ஒருவரை சரமாரியாக தாக்கினர். இதில் அந்த மாணவர் பலத்த காயமடைந்தார். இதையடுத்து அவர் சிகிச்சைக்காக திருக்கோவிலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்த தகவலின் பேரில் திருக்கோவிலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாபு, சப்-இன்ஸ்பெக்டர் சிவச்சந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். தொடர்ந்து இது குறித்த புகாரின் பேரில் அந்த 9 மாணவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.




Next Story