கடலூர் மத்திய சிறையில் பரபரப்புதண்டனை கைதி தற்கொலை முயற்சிபோலீசார் விசாரணை
கடலூர் மத்திய சிறையில் தண்டனை கைதி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கடலூர் முதுநகர்,
கடலூர் அருகே கேப்பர் மலையில் உள்ள மத்திய சிறைச்சாலையில் ஆயிரத்துக்கும் அதிகமான தண்டனை மற்றும் விசாரணை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இங்கு நேற்று மதுரையை சேர்ந்த வீரபத்திரன் மகன் சுபாஷ் சந்திரபோஸ்(வயது 26) என்ற தண்டனை கைதி, அங்குள்ள கழிவறையில் இருந்த டியூப் லைட்டை எடுத்து உடைத்து, அவரது 2 பக்க மார்பிலும், குத்தி தற்கொலை முயற்சி மேற்கொண்டார். இதில் காயம் அடைந்த சுபாஷ் சந்திரபோசை சிறை காவலர்கள் அங்குள்ள ஆஸ்பத்திாியில் சேர்த்தனர். அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர்.
இது குறித்து சிறை அலுவலர் கடலூர் முதுநகர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடலூர் மத்திய சிறையில் தண்டனை கைதி ஒருவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.