அரசு மகளிர் கல்லூரியில் பட்டமளிப்பு விழா


அரசு மகளிர் கல்லூரியில் பட்டமளிப்பு விழா
x

கிருஷ்ணகிரி அரசு மகளிர் கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது.

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி அரசு மகளிர் கலைக்கல்லூரியில் 14-வது பட்டமளிப்பு விழா நேற்று நடந்தது. இதற்கு கல்லூரி முதல்வர் கண்ணன் தலைமை தாங்கினார். சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் விழாவில் கலந்து கொண்டு 2 ஆயிரத்து 500 மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி பேசினார். இதில் தமிழில் 5 மாணவிகள் முனைவர் பட்டம் பெற்றனர். ஆய்வியல் நிறைஞர் பட்டத்தை தமிழில், 17 மாணவிகளும், உயிர் வேதியியல் துறையில் 3 மாணவிகளும் பெற்றனர்.

2016-2019, 2017-2020, 2018-2021 ஆகிய ஆண்டுகளில் படித்து தேர்ச்சி பெற்ற இளநிலை, முதுநிலை, ஆய்வியல் நிறைஞர், முனைவர் பட்ட ஆய்வு மாணவர்கள் அனைவரும் பட்டம் பெற்றனர். விழாவில் மாணவிகள் மற்றும் அவரது பெற்றோர் உள்பட பலர் கலந்து ெகாண்டனர். விழா ஏற்பாடுகளை துறை தலைவர்கள் உமா, லாவண்யா, கல்பனா, வள்ளி சித்ரா, சிவகாமி, ஜெயந்தி, உதவி பேராசிரியர்கள் முரளி, பரமகுரு, சீனிவாசன் ஆகியோர் செய்திருந்தனர்.


Next Story