பட்டமளிப்பு விழா


பட்டமளிப்பு விழா
x
தினத்தந்தி 2 Oct 2022 12:15 AM IST (Updated: 2 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

பர்கூர் அரசு என்ஜினீயரிங் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

கிருஷ்ணகிரி

பர்கூர்:

பர்கூர் அரசு என்ஜினீயரிங் கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. விழாவுக்கு கல்லூரி முதல்வர் விஜயன் தலைமை தாங்கினார். பெங்களூரு மூத்த முதன்மை விஞ்ஞானி வெங்கடேஷ்வரலு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி பேசினார். விழாவில் 2017-2021-ம் கல்வியாண்டில் பயின்ற 204 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. இதில் கல்லூரியின் துறை தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர் கலந்து கொண்டனர்.


Next Story