வியாசா கல்லூரியில் பட்டமளிப்பு விழா


வியாசா கல்லூரியில் பட்டமளிப்பு விழா
x
தினத்தந்தி 20 Nov 2022 12:15 AM IST (Updated: 20 Nov 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon

வாசுதேவநல்லூர் அருகே சுப்பிரமணியபுரத்தில் உள்ள வியாசா கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியின் பட்டமளிப்பு விழா நடந்தது.

தென்காசி

வாசுதேவநல்லூர்:

வாசுதேவநல்லூர் அருகே சுப்பிரமணியபுரத்தில் இயங்கி வரும் வியாசா கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியின் 2-வது பட்டமளிப்பு விழா புளியங்குடி வி.வி.சாய் மஹாலில் நடைபெற்றது. விழாவிற்கு கல்லூரி சேர்மன் எஸ்.வெள்ளத்துரை பாண்டியன் தலைமை தாங்கினார். கல்லூரி நிர்வாக இயக்குனர் வெ.வெள்ளத்தாய் முன்னிலை வகித்தார். கல்லூரி துணை சேர்மன் பிரகாசவல்லி சுந்தர் ஆண்டறிக்கை வாசித்தார். கல்லூரி முதல்வர் ஈஸ்வரன் அனைவரையும் வரவேற்றார்.

விழாவில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக, கல்லூரி வளர்ச்சிக்கழக டீன் சி.கண்ணன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு 280 மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கி பேசினார். இதில் கணிதத்துறையை சேர்ந்த ராஜேஸ்வரி, பொதுத்தமிழில் பல்கலைக்கழகத்திலேயே முதல் மாணவியாக வந்து தங்கப்பதக்கம் பெற்றார். மேலும் 24 மாணவிகள் பல்கலைக்கழக தரவரிசை பட்டியலில் இடம்பிடித்து வெள்ளிப்பதக்கம் பெற்றனர். விழாவில் தேர்வு கண்காணிப்பாளர் சுஜாதா மற்றும் துறைத்தலைவர், பேராசிரியர்கள், மாணவிகள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர். கல்லூரி செயலாளர் சுந்தர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். ஏற்பாடுகளை கல்லூரி நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.


Next Story