போடி ஏலக்காய் விவசாயிகள் சங்க கல்லூரியில் பட்டமளிப்பு விழா


போடி ஏலக்காய் விவசாயிகள் சங்க கல்லூரியில் பட்டமளிப்பு விழா
x
தினத்தந்தி 13 Feb 2023 2:00 AM IST (Updated: 13 Feb 2023 2:00 AM IST)
t-max-icont-min-icon

போடியில் உள்ள ஏலக்காய் விவசாயிகள் சங்க கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது.

தேனி

போடியில் உள்ள ஏலக்காய் விவசாயிகள் சங்க கல்லூரியில் 38-வது பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது. கல்லூரி தலைவர் எஸ்.வி.சுப்பிரமணியன் தலைமை தாங்கி, வாழ்த்துரை வழங்கினார். கல்லூரி முதல்வர் சிவக்குமார் வரவேற்றார். இந்த விழாவில் மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணை வேந்தர் குமார் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, இளங்கலை, முதுகலை மற்றும் ஆய்வுத்துறையை சேர்ந்த 564 மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார்.

பின்னர் அவர் பேசுகையில், மாணவர்கள் தங்களை பற்றிய சுய பரிசோதனையை தினமும் வளர்த்துக்கொள்ள வேண்டும். நம்மை பற்றிய சிந்தனையே நம்மை வாழ்க்கையில் உயர்வடைய செய்யும். பக்குவப்பட்டவர்களின் அறிவுரைகளை கேட்பதில் தான் மாணவர்களின் வெற்றி உள்ளது. உணவு சார்ந்த ஆழ்கடல் ஆராய்ச்சிகள் மற்றும் கனிமங்கள் நிறைந்த ஆழ்புவி ஆராய்ச்சிகள் என இன்னும் நம் நாடு சாதிக்க வேண்டிய வளர்ச்சிகள் நிறைய உள்ளன. அவற்றில் மாணவர்கள் தங்களது பங்கினை நிலைநாட்ட வேண்டும். பொருளாதாரம், உயர் தொழில்நுட்பங்களில் கணிதத்தின் பங்கு அளப்பரியது. எனவே அதில் தனிக்கவனம் செலுத்த வேண்டும் என்றார்.

இந்த விழாவில் கல்லூரி துணைத்தலைவர் ராமநாதன், செயலாளர் புருஷோத்தமன், நிர்வாக குழு உறுப்பினர் கமலநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், மாணவ-மாணவிகள், கல்லூரி துறை தலைவர்கள், பேராசிரியர்கள், பெற்றோர்கள், ஏலக்காய் விவசாயிகள், வியாபாரிகள் கலந்துகொண்டனர். முடிவில் கல்லூரி துணை முதல்வர் பாலமுருகன் நன்றி கூறினார்.


Next Story