குன்னூர் தந்தி மாரியம்மன் கோவில் தேர்திருவிழா: தீர்த்தக்குடம் எடுத்து பக்தர்கள் ஊர்வலம்
குன்னூர் தந்தி மாரியம்மன் கோவில் தேர்திருவிழா: தீர்த்தக்குடம் எடுத்து பக்தர்கள் ஊர்வலம்
நீலகிரி
குன்னூர்
குன்னூரில் கடந்த ஒரு மாதமாக தந்தி மாரியம்மன் கோவிலில் சித்திரை தேர்த்திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதன் ஒரு கட்டமாக குன்னூர் சந்திராகாலனி மக்கள் சார்பில் தீர்த்த குட ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலம் செண்டை மேளம் முழங்க சந்திரா காலனியிலிருந்து புறப்பட்டு மோர்ஸ் கார்டன், பஸ் நிலையம், மவுண்ட் ரோடு வழியாக தந்திமாரியம்மன் கோவிலை அடைந்தது. அங்கு அபிஷேக ஆராதனை, அன்னதானம் ஆகியவை நடைபெற்றது. இரவு அம்மன் தேர் திருவீதி உலா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். சிவன், பார்வதி, காளி ஆகிய கடவுள் வேடங்களிட்டு ஆடியது பார்வையாளர்களை கவர்ந்தது. அதன்பிறகு இரவில் வர்ணஜால வானவேடிக்கை நடைபெற்றது.
Related Tags :
Next Story