கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
கள்ளக்குறிச்சியில் கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு மாநில கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் குமார் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் தெய்வீகன், மாவட்ட பொருளாளர் செந்தில், மாவட்ட துணைத் தலைவர் கலைச்செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ரேஷன் கடைக்கு பொருட்கள் எடை குறைவாக அனுப்பப்படுவதை கண்டிப்பது, .விற்பனையாளர்களை நிரந்தர பணி ஈர்ப்பு மூலம் சொந்த மாவட்டத்திற்கு பணியிடம் மாற்றம் செய்ய வேண்டும் என்பன உள்பட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஓய்வு பெற்ற சங்க மாநில பொருளாளர் கலியபெருமாள் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட துணைத் தலைவர் ஜெயவேலு, இணைச் செயலாளர்கள் ஞானாம்பிகை, முனுசாமி, போராட்ட குழு தலைவர் தங்கமணி, செயலாளர் முருகன், தெற்கு மண்டல தலைவர் சின்னதுரை உள்பட சங்க நிர்வாகிகள் மற்றும் கூட்டுறவு சங்க பணியாளர்கள், ரேஷன் கடை விற்பனையாளர்கள் உள்பட 100-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.