கூட்டுறவு வங்கி மேலாளர் தற்கொலை


கூட்டுறவு வங்கி மேலாளர் தற்கொலை
x

திருவண்ணாமலையில் கடன் பிரச்சினையால் கூட்டுறவு வங்கி மேலாளர் தற்கொலை செய்து கொண்டார்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலையில் கடன் பிரச்சினையால் கூட்டுறவு வங்கி மேலாளர் தற்கொலை செய்து கொண்டார்.

குளத்தில் ஆண் பிணம்

திருவண்ணாமலை கிரிவலப் பாதை செங்கம் சாலையில் உள்ள சிங்கமுக தீர்த்த குளத்தில் நேற்று காலை ஆண் பிணம் ஒன்று மிதந்தது. இதைக்கண்ட அக்கம் பக்கத்தினர் திருவண்ணாமலை டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் தீயணைப்பு துறையினர் அங்கு வந்து குளத்தில் மிதந்த பிணத்தை மீட்டனர். விசாரணையில் குளத்தில் இறந்து கிடந்தவர் திருவண்ணாமலை பே கோபுரம் 6-வது தெருவை சேர்ந்த சத்தியநாராயண மூர்த்தி (வயது 50) என்பதும், திருவண்ணாமலை நகர கூட்டுறவு வங்கியில் மேலாளராக பணியாற்றி வந்ததும் தெரியவந்தது.

இவரது மனைவி புனிதா. இவர்களுக்கு ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர். நேற்று அதிகாலை 2 மணி அளவில் வீட்டில் இருந்து வெளியே சென்றுள்ளார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. அதைத்தொடர்ந்து அவர் குளத்தில் பிணமாக மீட்கப்பட்டுள்ளார்.

போலீஸ் விசாரணை

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், கடன் பிரச்சினையில் சத்தியநாராயண மூர்த்தி தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. மேலும் இதுதொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கூட்டுறவு வங்கி மேலாளர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திருவண்ணாமலையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story