கூட்டுறவு சங்க செயலாளர்கள் ஆய்வு கூட்டம்


கூட்டுறவு சங்க செயலாளர்கள் ஆய்வு கூட்டம்
x

கூட்டுறவு சங்க செயலாளர்கள் ஆய்வு கூட்டம்

நாகப்பட்டினம்

வெளிப்பாளையம்

நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கூட்டுறவு துறை சார்பில் கூட்டுறவு சங்க செயலாளர்கள் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு மண்டல இணை பதிவாளர் அருள் அரசு தலைமை தாங்கினார். துணைப்பதிவாளர் (பொது வினியோக திட்டம்) (பொறுப்பு) பன்னீர்செல்வம் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களை பல்நோக்கு சேவை மையங்களாக மாற்றுவது குறித்தும், வேளாண்மை உட்கட்டமைப்பு நிதி திட்டத்தின் கீழ் முன்னேற்றம் அடைவது குறித்தும் விவாதிக்கப்பட்டது. கூட்டத்தில் கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கி முதன்மை வருவாய் அலுவலர் ஜெகத்ரட்சகன், கூட்டுறவு சங்க செயலாளர் ஆகியோர் கலந்து கொண்டனர்.


Next Story