வேளாண் வளர்ச்சி திட்டம் தொடர்பான ஒருங்கிணைப்பு குழு கூட்டம்
வேளாண் வளர்ச்சி திட்டம் தொடர்பான ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடைபெற்றது.
கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் கலைஞரின் அனைத்து கிராமம் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் தொடர்பான ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் பிரபுசங்கர் தலைமை தாங்கினார்.
அனைத்து வட்டாரங்களிலும் தேர்வு செய்யப்பட்ட தரிசு நில தொகுப்புகளில் ஒவ்வொன்றிற்கும் செயல் திட்டத்தினை வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண்மை பொறியியல் துறை, வேளாண்மை வணிகத்துறை, மீன்வளத்துறை, பட்டுவளர்ச்சித் துறை, கூட்டுறவுத்துறை, தாட்கோ, மின்சாரத்துறை மற்றும் மாவட்ட முன்னோடி வங்கி என அனைத்து துறைகளின் திட்டங்களையும் ஒருங்கிணைத்து செயல்திட்டம் தயாரிக்கப்பட்டது.
இந்த செயல்திட்டத்தின் முன்னேற்ற பணிகளை, செயல்திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தரிசு நில தொகுப்பில் உள்ள அனைத்து விவசாயிகளும் பயனடையும் வகையில் திட்டத்தினை செயல்படுத்த வேண்டும்.
கூட்டத்தில் வட்டார அளவில் அனைத்து துறை அலுவலர்களுடன் கூடிய குழு அமைத்து ஆய்வு கூட்டம் நடத்தி அதன் கூட்ட நடவடிக்கைகளை வேளாண்மை இணை இயக்குனருக்கு அறிக்கை அனுப்ப வேண்டும். தரிசு நில தொகுப்புகளில் சாதனை அடையாத வட்டாரங்களை ஆய்வு மேற்கொண்டு அடுத்த கூட்டம் நடைபெறுவதற்குள் சாதனை அடைய வேண்டும் என கலெக்டர் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.